அனைவருக்கும் வணக்கம்
கற்பகம் உயர்கல்விக்கழகம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) மொழிகள் துறையின் தமிழ்ப்பிரிவு மற்றும் ஆசிய ஆராய்ச்சி சங்கம் இணைந்து நடத்தும் 12- நாள் பன்னாட்டு அளவிலான இணையவழி கருத்தரங்கம்.
“இந்திய இலக்கியச் சிந்தனைகள் – பன்னாட்டுக் கருத்தரங்கம் (இணையவழி)” இந்தியமொழி இலக்கியங்கள் குறித்த உரையாடல்களின் நிகழ்த்துக் களம்) ஜூலை 21, புதன்கிழமை முதல் ஆகஸ்ட் 01 ஞாயிற்றுக்கிழமை வரைமாலை 6 மணி முதல் 7 மணி வரையில் zoom செயலி வழியாக நடைபெறவுள்ளது.
பதிவுப்படிவம் – https://forms.gle/Jd3toy6BPFJNigeW9
இந்தியமொழிகளில் ஏராளமான இலக்கியங்கள் தோன்றியிருக்கின்றன. இவை பன்னெடுங்கால வரலாற்றை உடையன. காலந்தோறும் பல்வேறுவகையான இலக்கிய வகைமைகளும் அது சார்ந்த உரையாடல்களும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருகின்றன. இச்சூழலில், பரந்துபட்ட இந்தியமொழி இலக்கியங்களை கால, தேச, வர்தமானங்களைக் கடந்து ஒருங்கே அறிமுகப்படுத்தவும், அவை பற்றிய ஒரு மதிப்பீட்டை, புரிதலை, சிந்தனையைத் தமிழ்ச்சூழலில் முன்வைத்து உரையாடவுமானதொரு தொடர் நிகழ்வரங்கை உருவாக்கித் தருவதில் நாங்கள் மகிழ்ச்சியுறுகின்றோம். தமிழ்ப்பேராசிரியர்களும், ஆய்வாளர்களும், இலக்கிய ஆர்வலர்களும் இத் தொடர்க் கருந்தரங்கில் இணைந்து பயனடைய வேண்டுகிறோம்.