அனைவருக்கும் வணக்கம்
கற்பகம் உயர்கல்விக்கழகம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) மொழிகள் துறையின் தமிழ்ப்பிரிவு மற்றும் ஆசிய ஆராய்ச்சி சங்கம் இணைந்து நடத்தும் 07- நாள் இணையவழி தேசிய கருத்தரங்கம்.
“காலந்தோறும் சிற்றிலக்கியங்கள்”
*ஆகஸ்டு 23, திங்கள் கிழமை முதல் ஆகஸ்ட் 29 ஞாயிற்றுக் கிழமை வரை
(மாலை 5 மணி முதல் 6 மணி வரையில்) Zoom செயலி வழியே இணையலாம்
பதிவுப்படிவம் – https://forms.gle/omXcJNiXL2aUhu6s6
தமிழ்மொழி இலக்கண இலக்கியவளம் உடைய உயர்தனிச் செம்மொழி. காலத்திற்கேற்ப உருவ உள்ளடக்க மாற்றங்களைக் கொண்டு பல்வேறு வடிவங்களில் தோற்றம் பெற்றுள்ள தமிழிலக்கியங்களிடையே சிற்றிலக்கியங்களும் அதன் வகைகளும் சிறப்பிடம் பெறுகின்றன. உலக வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கினும் எழுந்த இச்சிற்றிலக்கியங்கள் வாயிலாக பல்வேறு காலங்களின் சமூகம், அரசியல் சூழ்நிலை, மக்களின் வாழ்க்கைநிலை, பண்பாடு போன்றவற்றைக் காணமுடிகின்றது. சிற்றிலக்கியங்களின் தோற்றத் தொன்மையை வரையறுக்க இயலாத நிலை இருப்பினும், தொல்காப்பியர் காலத்தில் முளைவிட்ட சிற்றிலக்கிய வித்துக்கள் பிற்காலத்தில் தனியொரு சிற்றிலக்கிய வகையாக புத்துயிர் பெற்று, தமிழிலக்கிய வரலாற்றில் தனிச்சிறப்பைப் பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் அடித்தளமக்கள் வரலாற்றை பிரதிபலிக்கின்ற மக்கள் இலக்கியமாகவும். வட்டார வழக்காறுகளை, வட்டார மொழிகளை அதன் தனித்துவங்களைப் பறைசாற்றுகின்ற இலக்கியங்களாகவும் இருந்து வந்திருக்கின்ற சூழலில் சிற்றிலக்கியங்கள் காலந்தோறும் வளர்ந்து வந்த நிலைகள், பொருண்மை மாறுபாடுகள், புதிய இலக்கிய வகைகளின் தோற்றம் மற்றும் பின்னணி என அதன் பன்முகங்களையும் விளக்கவும் விவாதிக்கவுமான ஏற்பாடாக காலந்தோறும் சிற்றிலக்கியங்கள் என்னும் இத்தேசிய கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. அனைவரும் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.
அழைப்பின் மகிழ்வில் – கற்பகம் உயர்கல்விக்கழக மொழிகள்துறை – தமிழ்ப்பிரிவு பேராசிரியர்கள்